ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? – பள்ளிக்கல்வித்துறை!

பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளை எழுதாத  மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்வது  கேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நோட்டீசில்,  17b பிரிவின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என பள்ளிக்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

CPS – புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் – RTI Reply!

x

 
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை . தமிழகம் ஏப் . , 1 ல் செயல்படுத்தினாலும் , இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான் , ‘ ‘ என ஆணையம் பதில் ளித்துள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை இதனை செயல்படுத்த வேண்டு மென , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

state secretary S.Babu State leader David Victor State Tressuerer Manikandan State womens Secretary Narmatha

1.ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு… ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..?

http://asiriyarperavai.org/?p=7384

2..தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்!

http://asiriyarperavai.org/?p=7406

  1. ஜூன் 8ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்க அனுமதி*

http://asiriyarperavai.org/?p=7402

4.பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?*

http://asiriyarperavai.org/?p=7400

5.63 காவல் கண்காணிப்பாளர்கள் இட மாற்றம் – காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு

http://asiriyarperavai.org/?p=7398

6.2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்!

http://asiriyarperavai.org/?p=7396

7.திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

http://asiriyarperavai.org/?p=7394

8.தமிழகத்தில் பேருந்து சேவை, முதல்வர் அதிரடி அறிவிப்பு.-மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. போக்குவரத்தை 8 மண்டலங்களாக  பிரிக்கப்பட்ட விவரம்;-

http://asiriyarperavai.org/?p=7392

தமிழகத்தில் நாளைமுதல் (ஜூன் 1ம் தேதி) பஸ்கள் ஓடும்

http://asiriyarperavai.org/?p=7390

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு நாடு முழுக்க மத்திய அலுவலக பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இயல்பாக நடக்கும் அலுவலக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பிரதமர் அலுவலகத்திலும் இதேபோல் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராகத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு நெருக்கமான பணியாற்றும் குழுவில் இவர் இடம்பெற்று இருக்கிறார். 2001ல் இருந்து இவர் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். பீகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர் தற்போது பிரதமர் அலுவலக பணியில் சேர்ந்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு*- சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பொது போக்குவரத்துக்கு தடை*

*8 மண்டலங்களாக பிரித்து 50% பொது போக்குவரத்துக்கு அனுமதி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பொது போக்குவரத்துக்கு தடை*
*பொது போக்குவரத்து மற்றும் மண்டலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை – தமிழக அரசு*

ஜூன் 8ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்க அனுமதி*

*தமிழக அரசு உத்தரவு*
*நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்*

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?*

*கோவை,*
*நீலகிரி,*
 *ஈரோடு,*
 *திருப்பூர்*
*கரூர்,*
*சேலம்*
, *நாமக்கல்லில் அனுமதி*
*-தர்மபுரி,*
 *வேலூர்,*
 *திருப்பத்தூர்,*
 *ராணிப்பேட்டை,*
 *கிருஷ்ணகிரி…*
*விழுப்புரம்,*
 *திருவண்ணாமலை*,
 *கடலூர்,*
 *கள்ளக்குறிச்சி…*
*நாகை,*
*திருவாரூர்,*
*தஞ்சை,*
 *திருச்சி*,
*அரியலூர்*,
 *பெரம்பலூர்,*
 *புதுக்கோட்டை…*
*திண்டுக்கல்,*
 *மதுரை,*
*தேனி,*
*விருதுநகர்,*
 *சிவகங்கை,*
 *ராமநாதபுரம்*
 *மாவட்டங்களில் அனுமதி*

63 காவல் கண்காணிப்பாளர்கள் இட மாற்றம் – காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் 63 பேர் ஒரே நேரத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் 63 பேர் ஒரே நேரத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். 63 பேரில் பலரும் ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சென்னையில் இருந்து வெளியூருக்கும், வெளியூரிலிருந்து சென்னைக்கும் எவ்வாறு பயணம் செய்ய முடியும் எனவும் ஏழு நாளில் புதிய பொறுப்பை எப்படி ஏற்க முடியும் எனவும் காவல் கண்காணிப்பாளர்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.