ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை(ONAM FESTIVAL LOCAL HOLIDAY FOR KOVAI,THIRUPUR, AND OOTY DISTRICT- BY KOVAI COLLECTOR MR.ARCHANA PATNAYAK.

ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும், 28ம் தேதி, ஒரு நாள் மட்டும் கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, செப்., 12ம் தேதி, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார். இதே போல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகைக்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply