தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு நாடு முழுக்க மத்திய அலுவலக பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இயல்பாக நடக்கும் அலுவலக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பிரதமர் அலுவலகத்திலும் இதேபோல் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராகத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு நெருக்கமான பணியாற்றும் குழுவில் இவர் இடம்பெற்று இருக்கிறார். 2001ல் இருந்து இவர் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். பீகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர் தற்போது பிரதமர் அலுவலக பணியில் சேர்ந்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply