தமிழகத்தில் நாளைமுதல் (ஜூன் 1ம் தேதி) பஸ்கள் ஓடும்

 தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்குஉத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply