Archive for April, 2020

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் டீச்சர்ஸ் டிஜிட்டல் டீம் (teachers Digital Team) மூலம் ஆசிரியர்களுக்கான கணிணி பயிற்சி http://asiriyarperavai.org/?p=7141 கொரானா நிதிக்கு ஒருமாத ஊதியத்தை கொடுத்த சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் http://asiriyarperavai.org/?p=7136 Flash News : ஈட்டிய விடுப்பு ( EL Surrender ) பணப் பயன் ஓராண்டு பெற ரத்து: தமிழக அரசு உத்தரவு! http://asiriyarperavai.org/?p=7134 ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! […]

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் டீச்சர்ஸ் டிஜிட்டல் டீம் (teachers Digital Team) மூலம் ஆசிரியர்களுக்கான கணிணி பயிற்சி

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் டீச்சர்ஸ் டிஜிட்டல் டீம் மூலம் ஆசிரியர்களுக்கான  பயிற்சி First batch பயிற்சி நிறைவு பெற்றது இதில் தமிழகத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு online கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டது .இதில் ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர் .ஆசிரியர்களுக்கு Ms office-  Powerpoint-Excel மற்றும் கணிணி அடிப்படை செயல்பாடுகள் கற்றுக்கொடுப்பட்டது மேலும் ஆசிரியர்களுக்கு Project- ப்ராஜெக்ட்-model book work மாதிரி புத்தகம் மற்றும் அதனை அவர்களால் வடிவமைக்கப்பட்டு செய்து காண்பித்தனர் […]

கொரானா நிதிக்கு ஒருமாத ஊதியத்தை கொடுத்த சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்கள் தனது ஒருமாத ஊதியத்தை கொரானா நிவாரண பணிக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் சில கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.குறிப்பாக, […]

Flash News : ஈட்டிய விடுப்பு ( EL Surrender ) பணப் பயன் ஓராண்டு பெற ரத்து: தமிழக அரசு உத்தரவு!

GO NO : 48 , Date : 27.04.2020 COVID-19 தொற்றுநோயிலிருந்து எழும் நிதி அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு விடுப்பு விதிகளின் விதி 7A இன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் / ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் 30 நாட்கள் என்காஷ்மென்ட் செய்வதற்காக சம்பாதித்த விடுப்பு கால இடைவெளியில் சரணடைதல், 1933 ஆரம்பத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டது  இந்த உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு.  […]

ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு […]

முதுநிலை மருத்துவ படிப்பு: தர வரிசை பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு கவுன்சிலிங், இந்த வார இறுதியில் துவங்குகிறது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,900 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகிறது. மீதமுள்ள, 950 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான, 250இடங்களும், மாநில அரசுக்கு உள்ளன.சென்னையில் உள்ள, அரசு பல் மருத்துவக் கல்லுாரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில […]

உயர்கல்வி சேர்க்கை: அடுத்த வாரம் முடிவு

‘கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்த வாரம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. ஊரடங்கால், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நுழைவு தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.பல மாநிலங்களில்,பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படாமல், பல பாடங்களுக்கான் தேர்வுகள் பாக்கி உள்ளன. இதனால், உயர்கல்வி நிறுவனங்களில், ஜூலையில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, […]

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் தேர்வு – மாவட்ட ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என மாநில அரசு தெரிவித்தது. இதனால் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், ஊரடங்கு காலக்கட்டத்தை பயனுள்ளதாக மாற்றவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் தேர்வு என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன்படி முதல் கட்ட தேர்வு, 100 மதிப்பெண்களுக்கான தேர்வு. இதில் பள்ளிப் பாடங்கள் தொடர்பான கேள்விகள் […]