Archive for June, 2018

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,govt .Reg. No.149/96 State secretary S.Babu, State leader David Victor, State Tressurer Manikandan State womens secretary Narmatha 1.SCERT-Block level training Schedule For Teachers on New Text Books – 1 st Std & 6th Std http://asiriyarperavai.org/?p=5196 2.தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் தடுக்க விரைவில் சட்டம்: செங்கோட்டையன்!! http://asiriyarperavai.org/?p=5198 3.6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு […]

RTI மூலம் இதுவரை 7000 கும் மேல் கேள்வி கேட்டு மக்களுக்கு பயன் தரும் பதில் பெற்ற ஏங்கல்ஸ்- வினா தொடுப்பது பற்றி அறிய வேண்டுமா?

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு!

பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறனை, ஆக., மாதத்துக்குள் மேம்படுத்தவேண்டும்,” என மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தியுள்ளார்.    பள்ளி கல்வித்துறை, புதுப்பாடத்திட்டத்தை தொடர்ந்து, பல்வேறுபுதுமைகளை புகுத்தியுள்ளது. அதில், நிர்வாக மாற்றமும் முக்கிய பங்குவகிக்கிறது. இதனையடுத்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அந்தந்த ஒன்றியங்களில்நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு வடுகபாளையம்பள்ளியிலும், வடக்கு ஒன்றியத்துக்கு ஆர்.பொன்னாபுரம் பள்ளியிலும்ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வட்டார கல்வி அலுவலர்கள்பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் நாசரூதீன் தலைமை வகித்து, பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிகளில், மாணவர்திறன் மேம்பட ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவலியுறுத்தினார். மாவட்ட கல்வி அலுவலர் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில்,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.பள்ளிகளில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வழங்கப்பட்டுள்ளநலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும்கேட்டறிய கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் ஆய்வு செய்த போது, 30 சதவீதம் மாணவர்கள் பாட புத்தகத்தைவேகமாக படிக்கும் திறன் கொண்டுள்ளனர். மற்ற, 70 சதவீத மாணவர்கள் பாடபுத்தகத்தை வேகமாக படிக்க திணறுகின்றனர்.   தமிழ், ஆங்கில மொழி பாடங்களை திணறாமல் வேகமாக படிக்க ஆசிரியர்கள்தொடர் பயிற்சி கொடுக்க வேண்டும். வரும், ஆக., மாதத்துக்குள் மாணவர்கள்பாட புத்தகத்தை வேகமாக படிக்கும் திறனை மேம்படுத்திட வேண்டும். மாணவர்கள் மனதில் பாடங்கள் எளிதாக பதியும் வகையில் கற்பிக்க வேண்டும்என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு சில மாணவர்களிடம்எழுத்து பயிற்சி இல்லை. பாடங்களை புரிந்து படிப்பதுடன் எழுத்து பயிற்சியும்மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அடிப்படை கணக்குகள் நன்றாகமாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப பயிற்சி அளிக்கவேண்டும்.   மாணவர்கள் திறமையை மேம்படுத்தினால், அவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது, பாடங்களை எளிதாக கற்க முடியும். இதற்கான ஆலோசனை தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகை பதிவேட்டில் உள்ளமாணவர்களின் பெயர்களை இ.எம்.ஐ.எஸ்.,ல் பதிவிடும் பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.  

தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுடைய சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

SSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை -கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிப்பு!

நடப்பு கல்வியாண்டு முதல், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்விஇயக்ககம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தையும்இணைத்து செயல்படுத்தும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.   கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் வழிகாட்டுதல் படி,எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் புதிய மாற்றங்களுடன் கூடியபயிற்சிகள் வழங்குவது, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது போன்றசெயல்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒருமாதம் நிறைவடைந்தும், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ.,வில்உள்ளவர்களுக்கு நடப்பாண்டுக்கான பணிகள் என்னென்ன, பள்ளிகளில்ஆய்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் எதுவும்இதுவரை வழங்கப்படவில்லை.    மத்திய அரசு, மூன்று இயக்ககங்களும் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமேஉறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்தெரிவிக்கப்படாததால், தற்போது, ஆசிரியர் பயிற்றுனர்கள் பணிகளைமேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வழக்கமாக, கல்வியாண்டின்துவக்கத்தில், பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு மேற்கொள்வதுவழக்கம். இப்போது, எதன்படி ஆய்வு நடத்துவதென்பது தெளிவானவழிகாட்டுதல் இல்லை.இதனால், மாதம்தோறும் நடத்தப்படும்குறுவளமையப்பயிற்சிகளும் நடத்தப்படவில்லை. அறிவிப்புகளை அவசரமாகவெளியிட்டு அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தாமதப்படுத்துவதால்,கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Notes Of Lesson) எழுதும் முறை குறித்து முதன்மை கல்வி அலுவலர் கடிதம்…!!

CLICK HERE-TO DOWNLOAD NOTES OF LESSON STEPS

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் தடுக்க விரைவில் சட்டம்: செங்கோட்டையன்!!

SCERT-Block level training Schedule For Teachers on New Text Books – 1 st Std & 6th Std

CLICK HERE-TO DOWNLOAD -SCERT-TEXT BOOK TRAINING PROC