Archive for March, 2018

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,www.asiriyarperavai.org. Tn Govt Reg No: 149/96

www.asiriyarperavai.org State Secretary S.Babu, State Leader David Victor, State Tressurer Manikandan 1.Top Government Jobs in India March 2018 http://asiriyarperavai.org/?p=4832 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு http://asiriyarperavai.org/?p=4830 தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை http://asiriyarperavai.org/?p=4828 அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் […]

Top Government Jobs in India March 2018

Company Name Post Qualification Last Date Application Top Government Jobs in India March 2018 Tamilnadu TNRD Recruitment 2018 506 10th 10.04.2018 Click Here Tamilnadu Tourism Development Corporation 65  8th, 10th, ITI, Diploma, Any Degree 08.04.2018 Click Here Supreme Court of India Recruitment 2018 78 10th 15.04.2018 Click Here Staff Selection Commission (SSC) 1330 Any Degree 02.04.2018 Click Here Railway […]

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி வரி செலுத்துபவர்களுக்காக சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு […]

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை

​ தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட […]

அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ […]

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள்ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும்அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும்தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டுதோறும்ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலைபதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள்  வாழ்வுச்சான்று பெற்றுகருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன்29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும்அலுவலகத்தில் ஆஜராகி பதிவு  செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில்வர வேண்டும். ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்டகருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள்  வழியாகநேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார்அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம் நேர்காணல்  செய்ய வழிவகைசெய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாளஅட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின்ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில்  சமர்ப்பிக்கலாம்.   ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டுவரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரைஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டைமற்றும்  நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்(www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன்நகல்களுடன்  வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும்கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்)மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க  வேண்டும்.தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்கவேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.  

ஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போராட்டம்

டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 10மணி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்,  பட்டதாரிகள்,முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் என 4பிரிவினராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள்  ஆசிரியர்தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தனித்தனிக் குழுக்களாக முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு  குவிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வை 2013ம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஒருகூட்டமைப்பாக கோஷம் போட்டபடி வந்தனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க காத்திருந்தனர். அது குறித்து அந்த கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில்ஆசிரியர் தகுதித் தேர்வில் 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 ஆண்டுகள்கடந்த நிலையில், இன்னும் பணி நியமனம்  இல்லை. பள்ளிக் கல்வி அமைச்சர் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்றுஜனவரி மாதம் தெரிவித்தார். தொடக்க கல்வித்துறை, பள்ளிக்  கல்வித்துறையில்ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். இல்லை என்றால், சட்டப் பேரவையை  முற்றுகையிடுவோம்என்றார். அடுத்ததாக 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் சார்பில்நடத்த முற்றுகை போராட்டத்தில்  சென்னையை சேர்ந்த வெங்கட் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி–்த் தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சம்பேர் எழுதினர். அதில் 34 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பணி  ஆணைகிடைக்கும் என்று காத்திருக்கிறோம்.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்க வேண்டும். தாள் ஒன்றுக்கு சான்றுசரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று  கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரை சந்திக்கவந்தோம். அவரை சந்தித்த பிறகு ஒரு மாதம் காத்திருக்க சொன்னார் என்றார். சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் அதன்ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் காலியாகஉள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 இடங்களை  நிரப்ப கடந்த ஆண்டுசெப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வு  நடந்தது. அதில் 35 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் எழுதினோம். தேர்வு முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகளைவெளியிடவில்லை.  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர்போட்டித் தேர்வில் குளறுபடிகள் நடந்ததால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடம்பெற்ற ஓஎம்ஆர்  தாளை மீண்டும் திருத்த முடிவு செய்துள்ளோம். விரைவில்முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதனால்  முடிவுகள் வெளிவரும் காத்திருப்போம் என்று செல்வம் தெரிவித்தார். முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வு எழுதி பணி நியமனத்துக்காககாத்திருப்ேபார் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3300 நிரப்ப போட்டித் தேர்வுநடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 2300 பேருக்கு பணி  நியமனம்வழங்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ளவர்களுக்கு சான்று சரிபார்–்ப்பு முடிந்துள்ள நிலையில் பணி நியமனஆணை இன்னும் வழங்கவில்லை.  ஆதிதிராவிடர் நலத்துறையில் 220பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் எங்களை நியமிக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்ள  வந்தோம். விரைவில் முடிவு தெரிவிப்பதாக டிஆர்பிஅதிகாரிகள் ெ தரிவித்துள்ளனர். அதனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியரகள்கலைந்து  சென்றனர். போலீசாரை வெளியே நிற்க வைத்த அதிகாரிகள்   மேற்கண்ட நான்கு பிரிவினரும் டிஆர்பி அலுவலகம் முன்பு முற்றுகையில்ஈடுபட்டு இருந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய அதிகாரிகளிடம் பேச ஏற்பாடுசெய்தனர். ஆனால் டிஆர்பியின் தலைவர் நந்தகுமாரிடம் பேச வேண்டும்  என்றுபோராட்டக் காரர்கள் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து டிஆர்பி தலைவருக்குதகவல் தெரிவிக்க சென்ற போலீஸ் அதிகாரிகளை உள்ளே விடாமல் ெவளியில்காக்க வைத்தனர் டிஆர்பி  அதிகாரிகள். மேலும், டிஆர்பி  தலைவர் நந்தகுமார் முக்கியமான மீட்டிங்கில் இ ருப்பதால்அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று  போலீசாருக்குதெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஆர்பி உறுப்பினர் செயலாளர் உமாவை பேசஅழைத்தனர். ஆனால் அவர் வழக்கம் போல மனுக்களை  வாங்கிக் கொண்டுபதில் கூறி அனுப்பி விட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இவ்வளவுகளேபரத்துக்கும் இடையிலும் தலைவர் நந்தகுமார் அவர்  அறையில் இருந்துவெளியில் வரவே இல்லை. அதனால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.  

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்