Archive for October, 2017

Anaithindia Asiriyar Peravai

Anaithindia Asiriyar Peravai. org www.asiriyarperavai.org 1.மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி முதியோர் பென்ஷனில் அபராதம் வசூலிக்க வங்கிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு http://asiriyarperavai.org/?p=3429 2.பணி நிரந்தரம் செய்யவும் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!! http://asiriyarperavai.org/?p=3427 3.Flash News :G.O No. 320 Dt: October 27, 2017-Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest from 01.10.2017 to 31.12.2017 is […]

மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி முதியோர் பென்ஷனில் அபராதம் வசூலிக்க வங்கிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையில் அபராதம் பிடித்தம் செய்ய ஐகோர்ட் கிளை இடைக்காலதடை விதித்துள்ளது.மதுரை அருகே ஒய்.நரசிங்கம் கிராமத்தை சேர்ந்த வக்கீல்லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  நெல்லையை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு வழங்கப்பட்ட பென்ஷனில் ரூ.350பிடித்தம் செய்துள்ளனர். இதுகுறித்து  மூதாட்டி விசாரித்தபோது, அவரது வங்கிகணக்கில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லையென்பதால் பிடித்தம் செய்ததாககூறியுள்ளனர். உதவித்தொகையை முழுமையாக வழங்க வேண்டுமென அவர் கோரிக்ைகவிடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடந்த 3 மாதங்களில் இதுபோலஅரசு வங்கிகளில் 3 கோடிக்கும் அதிகமான கணக்குகளிலிருந்து ரூ.235 கோடிவரை அபராதமாக பிடித்தம் செய்துள்ளனர். முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுவோரின் வங்கி கணக்கில்மினிமம் பேலன்ஸ் இல்லையென்பதற்காக அபராதமாக பணம் பிடித்தம்செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானுஆகியோரது அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘வருமானமின்றி வறுமைக்கோட்டிற்குகீழ்உள்ளவர்களுக்குதான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதிலும் பிடித்தம்செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார். இதையடுத்து, ‘முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளில், குறைந்தபட்சபணம் இருப்பு இல்லையென்பதற்காக பணம் பிடிப்பது எதேச்சதிகாரம்’எனக்கூறிய நீதிபதிகள், வங்கிகளில் அபராதமாக பணத்தை பிடித்தம் செய்யஇடைக்காலத்தடை விதித்து விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.மனுவிற்கு ரிசர்வ் வங்கி தலைவர்,  மத்திய நிதித்துறை இணை செயலர், தமிழகசமூக நலத்துறை செயலர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும்உத்தரவிட்டுள்ளனர்.

பணி நிரந்தரம் செய்யவும் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!!

Flash News :G.O No. 320 Dt: October 27, 2017-Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest from 01.10.2017 to 31.12.2017 is 7.8%-Orders – Issued

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு – தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அவசர செய்தி……(இது போலி அறிக்கை என தகவல் வருகிறது.உறுதிப்படுத்தி கொள்ளவும்).

TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் தேவை

அரசாணை எண் 149 நாள்:27.10.2017- பொது விநியோகத்திட்டம்- 01.11.2017 முதல் நியாய விலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ 13.50 லிருந்து ரூ 25 ஆக உயர்வு