Archive for July, 2017

Prime Minister inaugurates Abdul Kalam memorial in Rameswaram Prime Minister Narendra after inaugurating the memorial for former President Abdul Kalam The memorial was built by the Defence Research and Development Organisation (DRDO) as a tribute to Kalam, coinciding with his second death anniversary. Prime Minister Narendra Modi on Thursday inaugurated a memorial to A.P.J. Abdul […]

2 ஆண்டுகளுக்கு ‘நீட்’ விலக்கு?

நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, விசாரணையில் உள்ளது. இந்நிலையில், ‘நீட்’ தேர்வில் விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் பெற,முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும்மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். நிரந்தர விலக்கு அளிக்கும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசுஅனுமதி வழங்க மறுத்துள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, இந்தஆண்டு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசு முன் வந்துஉள்ளதாககூறப்படுகிறது. இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: ‘இந்தாண்டு மட்டும்,நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, சட்டத்தில்வாய்ப் புள்ளதாஎன, பரிசீலிக்கப்படும்’ என, மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக, சட்ட நிபுணர்களுடன், தமிழக அதிகாரிகள், ஆலோசித்துவருகின்றனர். அத்துடன், குறைந்தது இரண்டு ஆண்டுகள் விலக்கு பெறும்முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.  

PRESS RELEASE:பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாணை எண் 727 உள் (போ.வ.7) துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.  

Syllabus of Special Teachers

Click Here-Syllabus for Direct Recruitment of Special Teachers 

பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக் கூட்டம், உயர்கல்வித்துறைசெயலர் சுனில்பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்றுநடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்திஅமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம்ஆண்டு பிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அண்ணாபல்கலைக் கழக கல்வி மன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின்முதல்வருமான கீதா கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில்41 பிரிவுக்கும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதியபாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கீகாரம் பெற்ற பொறியியல்கல்லூரிகளில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதிசெய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புதியபாடத்திட்ட குழு தயாரித்துள்ள புதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில்வெளியிடப்பட்டது. மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல்,பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பான பாடங்கள், தற்போது பிஇ,பிடெக் பட்டப்படிப்புடன் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும்மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல் பாடங்களை விருப்பபாடமாக எடுத்து படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெறவாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண்அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில்தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்வி என்று இடம் பெறாது.ஆனால் அவர்கள் தோல்வி அடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும்போது அகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுத வேண்டும்.மாணவர்–்கள் படிக்கும் போது இடையில் விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்துமீண்டும் அதே பட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்க அனுமதிஅளிக்கப்படுகிறது. ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடு முடிந்த பிறகும் அடுத்த 3ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காகவைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு 3ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும். இவ்வாறுஅவர் கூறினார்   Newer PostOlder PostHome Related  

தொடக்கக் கல்வி – தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் உபரி/காலிப்பணியிடம், பணி நிரவல் விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்  

FLASH NEWS : TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS POSTS – NOTIFICATION  

Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016 – Please Click here for Notification and Online application form.                                               Click here […]