Archive for November, 2015

பாடத்தை கவனிக்காமல் மொபைல்போனில் விளையாட்டு: ஆசிரியர் சோதனையில் சிக்கினர் பள்ளி மாணவியர்

கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மொபைல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மாணவியர் ஐந்து பேர், கையும் களவுமாக சிக்கினர். கோவை ராம் நகர், ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2, ‘சி’ பிரிவில், நேற்று முன்தினம், வணிகவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மாணவி ஒருவர், மொபைல்போனில் பேசியுள்ளார்; வேறு சில மாணவியரும், மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதிர்ச்சியடைந்த ஆசிரியர், தலைமையாசிரியர் நிர்மலா தேவி முன்னிலையில் சோதனை நடத்தினார். இதில், […]

பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு […]

ஊதியக்குழு பரிந்துரைகளைஅமல்படுத்த குழு

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் நியமித்து உள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக்குழு, தன் பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, 23 சதவீத ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, அமல்படுத்தும் குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. செலவீனத் துறையின் இணைச் செயலர் அளவிலான அதிகாரி ஒருவரின் தலைமையில், ஒன்பது அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பள்ளி கலவித்துறை அதிரடி அறிவிப்பு.

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு ‘நோட்டீஸ்’

மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்துஉள்ளது.தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிபகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால்பராமரிக்கப்பட்டு வந்தன.ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் […]

RH -LEAVE LIST 2016

7th pay commision

comparision of 6 th pay & 7th pay TNPSC VAO STUDY MATERIALS 7th Pay Commission Report (Central Government Employees) PAY BAND DETAILS OF 7 th PAY COMMISSION Seventh Central Pay Commission Full Details 7th pay commission

IMPORTANT NEWS

TNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை.விரைவில் வெளியாகிறது அறிவிப்பு. 14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,நாகை, திருவண்ணாமலை,திருவாரூர்,வேலூர்,நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 9.11.2015-திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, […]