அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

state secretary S.Babu State leader S.David Victor State Tressurer Manikandan State womens secretary Narmatha

1.சற்றுமுன் கிடைத்த தகவல்:-*முதுகலை ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்பில்லை.

http://asiriyarperavai.org/?p=7329

2.பள்ளிக் கல்வி, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் 18ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறையினர் பணிக்கு வர உத்தரவு.

http://asiriyarperavai.org/?p=7327

3.அகவிலைப்படியை முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

http://asiriyarperavai.org/?p=7325

4.ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது -கே.ஏ.செங்கோட்டையன்

http://asiriyarperavai.org/?p=7323

5.தலைமைச் செயலக ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் பணிக்கு வர தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

http://asiriyarperavai.org/?p=7321

6.ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..?

http://asiriyarperavai.org/?p=7319

7.சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

http://asiriyarperavai.org/?p=7317

8.10ம் வகுப்புபொது தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது- – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.

http://asiriyarperavai.org/?p=7315

9.அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு CEO-ன் முக்கிய அறிவிப்பு.

http://asiriyarperavai.org/?p=7311

10ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று  வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://asiriyarperavai.org/?p=7309

அடுத்த பத்து நாட்களில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வில்லை என நிலையை உருவாக்குவதே  ஆகும்.  கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மண்டலமாக மாற்றுவதே ஆகும்- ராதாகிருஷ்ணன் .

http://asiriyarperavai.org/?p=7307

அரசு ஊழியா்களாக இருந்து ஓய்வு பெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்குப் பிறகு மற்றொருவா் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது. அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.*

http://asiriyarperavai.org/?p=7305

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-www.asiriyarperavai.org

சற்றுமுன் கிடைத்த தகவல்:-*முதுகலை ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்பில்லை.

முதுகலை ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்பில்லை. அவர்கள் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள் என தகவல் கிடைத்துள்ளது. *தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே 10ம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் அதே பள்ளி ஆசிரியருக்கு, அதே பள்ளியில் தேர்வுப் பணி கிடையாது என்று தெரிகிறது.*

பள்ளிக் கல்வி, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் 18ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறையினர் பணிக்கு வர உத்தரவு

சென்னை: அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்று நேற்று அரசாணை வெளியிட்டதை அடுத்து,  பள்ளிக் கல்வி, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வி, தொடக்க
கல்வி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. அதேபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் பணிக்கு வராமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், 33% பணியாளர்களுடன் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்படலாம் என்று கடந்த வாரம் அரசு அறிவித்து. இதன் பேரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மே 17ம் தேதி (நாளை)யுடன் ஊரடங்கு முடியஉள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக அரசு அதிரடியாக நேற்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 18ம் தேதி  முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், ஊழியர்களை 2 பிரிவாக பிரித்து ஷிப்ட் அல்லது  சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும், ஏ குரூப் அதிகாரிகள், தலைமைப் பதவியில் இருப்போர் வாரத்தில் 6 நாட்கள் பணிக்கு வர வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அரசுத் தேர்வுகள் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி  இயக்கம், சமக்ர சிக்‌ஷா திட்டம் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அலுவலப் பணியாளர்கள் 18ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 18ம் தேதி முதல் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தொடங்கும்.

அகவிலைப்படியை முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி , மத்திய அரசும் , தில்லி மாநில அரசும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அகவிலைப்படியை முடக்கியது செல்லாது என்றும் , அவ்வாறு முடக்குவதற்கு அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் , பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்தில் ( PMNRF Prime Minister’s National Relief Fund ) சுமார் 3,800 கோடி ரூபாய் தொகுப்பு இருப்பதாகவும் , அதேபோன்று வெளிவந்துள்ள செய்திகளின்படி தற்போது பிரதமரின் பிஎம்கேர்ஸ் நிதியத்தில் 6,500 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றிருக்கிறார் என்றும் எனவே , அகவிலைப்படியை முடக்கக்கூடிய அளவிற்கு ‘ நிதி அவசரநிலை இல்லை ‘ என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் , நாட்டில் பணவீக்கம் , குறிப்பாக தில்லியில் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு ஊதியம் முடக்கப்பட்டிருக்கிறது என்றும் , தில்லியில் எரிபொருள் , மது , மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன என்றும் கூறியிருப்பதுடன் , அகவிலைப்படியை முடக்கி இருப்பது இந்திய அர சமைப்புச் சட்டம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் ஷரத்துக்களை மீறிய செயல் என்றும் , இவ்வாறு அகவிலைப்படியை முடக்க அரசாங்கத்திற்கு இச்சட்டங்களின் ஷரத்துக்கள் அதிகாரம் வழங்கிடவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் மையங்கள், கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள், அந்தந்தப் பகுதியிலேயே தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அறிவிக்கப்படும். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஜக்டோ-ஜியோ அமைப்பினர் புறக்ககணிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைமைச் செயலக ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் பணிக்கு வர தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் பணிக்கு வர தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக மே 15ம் தேதி வரை 33 சதவீத பணியாளர்களுடன் தலைமைச் செயலகம் இயங்கியது. அவர்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு அதற்கான செலவையும் அரசு ஏற்றுக் கொண்டது.
இந்தநிலையில், நாளை (18ம் தேதி) முதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள், சுழற்சி முறையில்  கட்டாயம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர்களின் வசதிக்காக தேவையான போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர்களும் இந்தப் பேருந்து வசதிகளை உரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..?

நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் பள்ளிகளில் 50% மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் 50% மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..
நாடு முழுவதும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 17ம் தேதியுடன் முடிவடைகிறது இதைத்தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது..
ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை குறித்து ஆராய்ந்து புதிய வழிகாட்டுதல்களை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவுக்கு உத்தரவிட்டு இருந்தது
இதன் அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க எனவும் பள்ளிகளில் 50% மாணவர்களை கொண்டு வகுப்புகளை நடத்தலாம் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் 50% மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க லாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது..
ஒரே நாளில் பள்ளிக்கு வராத மீதமுள்ள 50 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது யூடியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் பரிந்துரைகள் மீது வருகிற 11-ஆம் தேதி புதிய முடிவுகளை மத்திய அரசு அறிவிக்கும் இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் புதிய அறிவிப்புகள் வெளிவரலாம் ஊரடங்கு முடிந்த பின் ஜூன் 1-ஆம் தேதி நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும்.

சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளிப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விடுபட்ட பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிவடைந்த பின்னா் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் கடந்த பிப். 24-ஆம் தேதி தொடங்கி ஏப். 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு தீவிரமான நிலையில் பொதுமுடக்கம் உத்தரவுக்குப் பின்பு பொதுத்தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தொடா்ச்சியாக மே 17-ஆம் தேதி வரை ஏற்கெனவே பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தோ்வுகள் ரத்து, புதிய அட்டவணை வெளியீடு என பொதுத் தோ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியீடு என பல்வேறு வதந்திகள் பரவின. அப்போது சிபிஎஸ்இ நிா்வாகம் சாா்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதேபோன்று பொதுத்தோ்வுக்கான அறிவிப்பு சிபிஎஸ்இ அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவாா்கள்.
9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் பருவத்தோ்வு, பயிற்சித்தோ்வு, செய்முறைத்தோ்வு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்ச்சி முடிவு செய்யப்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்திருந்தது. இந்தநிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.